Mrs. Kamaleshwary Skantharajah
Date of Birth: 19 September 1950 - Deceased: 02 April 2026
யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - மோதரயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கமலேஸ்வரி ஸ்கந்தராஜா அவர்கள் 02-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை - சின்னம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான குருநாதபிள்ளை - பாக்கியலஷ்மி சம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற குருநாதபிள்ளை ஸ்கந்தராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திலீபனின் பாசமிகு தாயாரும்,
கமலநாதன், கமலராணி, கமலாதேவி காலஞ்சென்ற கமலேஸ்வரன், கமலராஜன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
பராசக்தி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ஸ்ரீவிஜயதரன், ரஞ்சனி, காலஞ்சென்றவர்களான சிவகணநாதன், அமிர்தகௌரி, சரவணபவன், அம்பிகா, குரு அரவிந்தன் (கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-04-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 - 1.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
