திரு. கனகலிங்கம் கந்தையா

கனகலிங்கம் கந்தையா

தோற்றம்: 10 ஏப்ரல் 1940 - மறைவு: 03 ஜூலை 2025

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகலிங்கம் கந்தையா அவர்கள் 03-07-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான இராசா - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரோஜினி தேவி (தேவி அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷ்ணவேணி (கனடா), கஜன் (அவுஸ்திரேலியா), நந்தகோபன் (கனடா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

மோகன் (கனடா), அமலா (அவுஸ்திரேலியா), தன்சினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வைஷ்ணவி, பைரவி, ஹம்சவி, அபிரா, அனிகா, காரியன், நகேதா ஆகியோரின் அன்புப் பேரனும், 

காலஞ்சென்றவர்களான இரத்தினம், பரமேஸ்வரி, பரமலிங்கம், இராசலிங்கம், சின்னத்துரை மற்றும் செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இராசகுலசிங்கம், கமலாதேவி, ஜெயவீரசிங்கம், பரராஜசிங்கம், சாந்தாதேவி, தனபாலசிங்கம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-07-2025 சனிக்கிழமை பிற்பகல் 2:30 - 6:30 மணி வரையும், 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 5:30 - 6:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/07/2025 04:00)