Mrs. Kanagamani Ambalavanarpillai

(Former Teacher)

Kanagamani Ambalavanarpillai

Date of Birth: 22 January 1939 - Deceased: 05 July 2025

யாழ். சாவகச்சேரி தென்மராட்சிப் பிரிவைச் சேர்ந்த கரம்பகத்தைப் பிறப்பிடமாகவும், கொடிகாமத்தை வசிப்பிடமாகவும்  தற்போது அவுஸ்திரேலியாவில் மெல்பேர்னை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகமணி அம்பலவாணர்பிள்ளை அவர்கள் 05-07-2025 சனிக்கிழமை இரவு தனது 86 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்த பின்பு மெல்பேர்ன் மணி என்ற புனை பெயரில் பல நூல்களை எழுதியுள்ளார்.

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், நாவற்காடு வரணி காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - அமிர்தவல்லி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை அம்பலவாணர்பிள்ளை (முன்னாள் கிராம சேவையாளர் - கொடிகாமம், மீசாலை வடக்கு கச்சாய் கிராம சேவையாளர் பிரிவுகள்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, இராசரத்தினம், செல்லத்தங்கம், சிவயோகம், ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராஜலக்ஸ்மி, சேதுப்பிள்ளை, காசிநாதர், கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரமேஸ் (பொறியியலாளர் - அவுஸ்திரேலியா), அகணி சுரேஸ் (பொறியியலாளர், எழுத்தாளர் - கனடா), ரமா (சங்கீத ஆசிரியை அவுஸ்திரேலியா), பிரேமா (மருத்துவ தாதி - அவுஸ்திரேலியா), பேராசிரியர் தாஸ் நிர்மலதாஸ் மெல்பேர்ன் பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியா) ஆகியோரின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராஜேஸ்வரி (அவுஸ்திரேலியா), ஜீவநந்தினி (கனடா), சிவராஜா (அவுஸ்திரேலியா), சற்குணம் (அவுஸ்திரேலியா), கீதா (அவுஸ்திரேலியா), ரஜனி (பிரான்ஸ்), பபிந்திரா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஸ்ரீரங்கன் (பிரான்ஸ்), மோகனராஜா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் சிறிய தாயாரும்,

சாயிலவன், சயனிகா, கிரிசன், காலஞ்சென்ற பைரவி, நந்தேஸ், காலஞ்சென்ற ஜனனி, ஜீவினி, அனிக்கா, அபிசா, சாரங்கன், பைரவி,பிரியங்கன், அலெக்ஸ், ஸ்ரீவன், சகானா, சுருதி, நீல், சாயிசூரியா, சாயித்திரேன், குணராஜ், கோபிராஜ் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்

ஆத்யா, ஆரியன் ஆகியோரின் பாசமிகு பூட்டியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-07-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 11:30 மணி முதல் Cumulus & Stratus Chappel, Bunurong Memorial Park (790 Frankston- Dandenong Road, Dandnong South VIC 3175) இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/07/2025 10:31)