Mrs. Kanagambal Sathasivam
Date of Birth: 04 May 1939 - Deceased: 27 January 2026
சிலாபத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தற்போது வவுனியாவை தற்காலிகு வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி உமாதேவி சதாசிவம் அவர்கள் 27-01-2026ம் திகதி செவ்வாயகிழமை அன்று இறைபகம் அடைந்தார்.
ஈழத்தின் புகழ்பெற்ற பாடகி திருமதி. கனகாம்பாள் சதாசிவம் காலமானார் .
தாயகத்தில் ஆரம்பகாலங்களில் யாழ் இசைக்குழுக்களின் ஆரம்ப காலங்களில் பெண்பாடகிகள் அருமையாக இருந்த காலங்களில் மனத்துணிவுடன் இசைக்குழுக்களில் பாடகியாகவந்து, பின்னாளில் பிரபல பாடகியாக திகழ்ந்தவர் என்பது சகலரும் அறிந்ததே,
ஆரம்பகாலங்களில் கண்ணன் கோஷ்டி, இரட்டையர்குழுவில் பாட ஆரம்பித்து பின்னர் எல்லா இசைக்குழுக்களிலும் பாடகியாக வலம் வந்தார்.
ஈழத்தில் தயாரான கோமாளிகள் திரைப்படத்தில் இவர் பாடிய "ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்" என்ற பாடலை கண்ணன் நேசம் இசையமைப்பில் பாடினார்.
இப்பபாடல் இன்றுவரை யாராலும் மறக்கமுடியாத பாடலாக திகழ்கிறது.
அதைவிட இன்னும் பல சொந்தப்பாடல்கள் பாடியுள்ளார் என்பதும் அவருக்குரிய சிறப்பாகும்..
அவரது பூதவுடல் நாளை 28-01-2026ம் திகதி புதன்கிழமை பிறபகல் 4:00 மணியளவில் வவுனியா வெளிக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
