Mrs. Kanagambal Shanmuganathan
Date of Birth: 05 November 1938 - Deceased: 05 March 2026
இந்தியா-தமிழ்நாடு பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூரை பூர்வீகமாகவும், கொழும்பு மற்றும் சென்னையை வசிப்பிடங்களாகவும் கொண்டிருந்த திருமதி. கனகாம்பாள் சண்முகநாதன் அவர்கள் 05-03-2026 வியாழக்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துசாமி -அலமேலு தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சபாபதி - பாப்பம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் துணைவியும்,
மனோரஞ்சனி, மாலினி, வாசுகி, அம்பிகா, கணேஷ்ராஜ், செந்தில்நாதன் ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற பெரியசாமி, பிரபாகரன், ராஜேந்திரன், ஜெகர், அருணா, சத்தியா ஆகியோரின் மாமியாரும்,
அமுதா - கோபால், மணிவண்ணன் - ஆனந்தி, சங்கீத் - கண்மனி, வாணி - ஸ்ரீனிவாசன், வானதி - சுரேஷ், திவ்யா -சக்திகுமரன், அர்ஜூன் - ஜோதி, கவின் - நிஹாஷா, துஷா, சிவா, யோகித் - கனிஷ்கா, அனிவர்த்தன் ஆகியோரின் பாட்டியும்,
அஞ்சனா, விஷ்வேஷ், மானசா, ஆதியா, அஷ்வின், ஹன்விகா, மிதுன், சாகித், ஜெயேஷ், ஐந்தவி, ஆதிரன், ரிஷேன், அத்விக், வேதாந்த் ஆகியோரின் பாசமிகு கொள்ளுப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் சென்னை இல்லத்தில் இடம்பெற்று, திருவுடல் சென்னை திருவேளங்காடு, புதிய ஆவடி ரோட் மின் மயானத்தில் முற்பகல் 11.00 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
