திருமதி. கனகாம்பிகை வைத்தியநாதன்

கனகாம்பிகை வைத்தியநாதன்

தோற்றம்: 08 ஜனவரி 1933 - மறைவு: 26 அக்டோபர் 2024

யாழ். சுவாமியார் வீதி, கொழும்புத்துறை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகாம்பிகை வைத்தியநாதன் 26-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சபாநடேசர்-இரத்தினவள்ளி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற துரைசாமி-மாணிக்கவள்ளி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற வைத்தியநாதன் (ஓய்வுபெற்ற மீன்பிடி இலாகா இலிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரோகிணி, பரதராசன் (கனடா), இந்திராணி, பிரியதர்சினி (இலண்டன்), காலஞ்சென்ற தினேஸராசன் (கனடா), குமுதினி (கனடா), சவுந்தரராசன் (இலண்டன்), திருவருட்செல்வி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தகுமார், கல்யாணி (கனடா), சுந்தரதாசன் (இலண்டன்), இராஜலட்சுமி (கனடா), மகேந்திரன் (கனடா), மாணிக்கவசந்தினி (இலண்டன்), சற்குருநாதன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற மனோன்மணி, சபாநாதன், அருளாம்பிகை, ஞானாம்பிகை, காலஞ்சென்ற யோகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்முகரட்ணம், காலஞ்சென்ற சரஸ்வதி, மங்கையற்கரசி, காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், இராமச்சந்திரன், சகுந்தலாதேவி ஆகியேராின் அன்பு மைத்துனியும்,

அனோஜன்-சுபாஷினி, ஆரணி-நிரோஷன், ஆரபி-நிதர்சன், அஜந்தன், ரேவதி, அஸ்வினி, லவன்-அபர்ணா, அருணன்-சித்ரா, அருந்ததி-குகரூபன், ஜனனி, யாதவன், கன்னிகா, மதீபன், மதீரன், சபீரன்-அனுசியா, திவ்வியன்,லக்‌ஷிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆத்விகன், பானுகவி, வைதேகி, வேலவன், கதிராயன், கைலாஷ், சாலினி ஆகியோரின் ஆசைப்பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-10-2024 திங்கட்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் புகழுடல் துண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/10/2024 04:00)