Mrs. Kanagambikai Sathiyanathan

Kanagambikai Sathiyanathan

Date of Birth: 18 December 1940 - Deceased: 08 February 2025

யாழ். புங்குடுதீவு 02ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் நோர்வே - ஒஸ்லோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியநாதன் கனகாம்பிகை அவர்கள் 08-02-2025 சனிக்கிழமை அன்று நோர்வே ஒஸ்லோவில் இயற்கை எய்தினார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான குணப்பிரகாசம் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற  சத்தியநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

தர்மகுணம் (சுவிஸ்), காலஞ்சென்ற பரநிருபசிங்கம் (பரமன்), இரங்கேஸ்வரி (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெனோவதாஸ் (ஜெனோ-கனடா), சந்திரதாஸ் (அகி-சுவீடன்), ஜெயதாஸ் (சுகு-நோர்வே), இரமணதாஸ் (இரமணன்-சுவிஸ்), காலஞ்சென்ற பிரேமதாஸ் (திலி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

மைதிலி (கனடா), குனில்லா (சுவீடன்), கீதாஞ்சலி-கீதா (நோர்வே), சுகந்தினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கௌதம்-ஜெசிகா, நவீன்-சிவாந்தி, நரேஷ், (கனடா) ஈடா, ஒகெப், வியோலா (சுவீடன்) சயானா, சுகானா (நோர்வே), ஓவியன், ஆதியன், இனியன் (சுவிஸ்) ஆகியோரின் ஆருயிர் பேர்த்தியும்,

ஆறியா-தேவி, இலியா-றூமி ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/02/2025 05:00)