திருமதி. கனகம்மா பஞ்சாட்சரம்

கனகம்மா பஞ்சாட்சரம்

தோற்றம்: 20 பெப்ரவரி 1941 - மறைவு: 17 செப்டம்பர் 2026

யாழ். சாவகச்சேரி பெருங்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகம்மா பஞ்சாட்சரம் அவர்கள் 17-09-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு - சிவகாமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசதுரை - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பஞ்சாட்சரம் (அருள்முருகன் ஜூவல்லர்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

மகேஸ்வரி (சாவகச்சேரி), காலஞ்சென்றவர்களான அரியரத்தினம் (அரியம் வெற்றிலைக்கடை- சாவகச்சேரி), மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவபாஸ்கரன் (சாரங்கா நகைமாடம் - யாழ்ப்பாணம்), சரோஜினி (கனடா), தவராஜா (கனடா), காலஞ்சென்ற சிவகுமார், உதயகுமார் B.Eng - (கனடா), காலஞ்சென்ற கிருபாகரன் (சாரங்கன் நகைமாடம்- யாழ்ப்பாணம்), பாலசரஸ்வதி (Project Manager- TI Group- கனடா), தர்சினி (ஆசிரியை- கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி), பாலகுமாரி (பாலசாரங்கா நகைமாடம்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஞானாம்பிகை (யாழ்ப்பாணம்), ரவிச்சந்திரன் (கனடா), புஸ்பராணி (கனடா), சுமதி (கனடா), காலஞ்சென்ற முரளிதரன் (கனடா), பீதாம்பரன் (பச்சிலைப்பள்ளி பிரதேசசபை), சுரேஸ் (பாலசாரங்கா நகைமாடம்- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாரங்கன் (சாரங்கா நகைமாடம்- கனடா) - பிரவீனா, காலஞ்சென்ற துவாரகன், வைஸ்ணவி- வாசவன், வைதேகி- பிரவீன் (வலம்புரி ஹொட்டல்- யாழ்ப்பாணம்), சரண்யன், சயந், சுபீட்சா, சஞ்சய், சச்சின் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

கார்த்திகா - நதீபன், சிந்துஜா, கோகுல், ராகுல், கபீஷணன், கிருஷியா, கிருத்திகா, கிருஷனா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

அதிராபார்வதி, சாத்விக் ஆகியோரின் ஆசைப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான சடாச்சரம், ஜீவகாருணியம், விமலபூசணி, கந்தசாமி மற்றும் பரமேஸ்வரி, காலஞ்சென்ற பிரமராம்பாள் ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-09-2026 திங்கட்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 22-09-2026 செவ்வாய்க்கிழமை காலை 8:00 - 11:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சிவபாஸ்கரன் (மகன்):- +94 77 357 7212
தவராஜா (மகன்):- +1 416 302 5165
உதயகுமார் (மகன்):- +1 647 507 5941
சுரேஸ் (மருமகன்):- +1 416 897 3195
தர்சினி (மகள்):- +94 77 918 4621

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/09/2026 00:00)