Mr. Kanaganayagam Nadarajah

(ஓய்வுபெற்ற நில அளவையாளர் (Surveyor))

Kanaganayagam Nadarajah

Date of Birth: 20 March 1948 - Deceased: 20 July 2025

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, ஜேர்மனி, கனடா - Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகநாயகம் நடராஜா அவர்கள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா - ஞானம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கலாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரவீணா, அபிராமி, ஆதித்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செந்தூரன், நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரன், முகிலன், வெண்ணிலா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஞானேஸ்வரி (ஜேர்மனி), இரத்தினம்மா (இலங்கை), வசந்தகுமாரி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலநாதன், இராஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பெர்லினா, வாகீசன், லகீசன், பிரம்மராஜ், கம்ஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,

சக்‌ஷிகா அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், குணலிங்கம், குணமணி  மற்றும் புஸ்பராணி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 12:00 - 2:00 மணி வரை Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/07/2025 04:00)