Mrs. Kanagarathinam Sivapaakiyam
Date of Birth: 06 August 1945 - Deceased: 17 May 2026
யாழ். உடுப்பிட்டி நாவலடியைப் பூர்வீகமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகரத்தினம் சிவபாக்கியம் அவர்கள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு-மாணிக்கம் தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பு-பொன்னம்மா தம்பதியினரின் மருமகளும்,
கனகரத்தினம் (ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
நக்கீரன் (பிரான்ஸ்), இளங்கீரன் (பிரதான பொறியியலாளர் RDA JAFFNA), காலஞ்சென்ற பகீதரன், சிவதர்சினி (ஆசிரியை), சிவாஜினி (ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மா (பிரான்ஸ்), நிலாமதி (ஆசிரியை), தர்மசீலன் (ஆசிரியர்), ஸ்ரீகாந்த் (DO வவுனியா) ஆகியோரின் அன்புமிகு மாமியாரும்,
சிவகாந்தா, சிவபத்மா, சிவயோகம், சிவமணி (டென்மார்க்), சிவநேசலிங்கம் (ஒய்வுநிலை புள்ளிவிபர ஆய்வாளர்), சிவராசலிங்கம் (ஓய்வுநிலை நிறைவேற்று பொறியியலாளர்), சிவசோதிலிங்கம் (சுவிஸ்), காலஞ்சென்ற சிவநந்தா ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,
ஆர்த்தீகன், அபிநயன், அக்சயா, ஆரூரன், நிவேதன், விஷ்ணுகா, பிரவீன், கலியுகன் (யாழ். மருத்துவ பீடம்), நிந்துஜா (பேராதனை. மருத்துவ பீடம்), மோஷிகா, துவாரகன், ஆருகன், நித்விகன் ஆகியோரின் பேரன்பு கொண்ட பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிசடங்குகள் 18-05-2026 திங்கட்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல வல்லை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
