Mrs. Kanagaratnam Motchaluxmy
Date of Birth: 20 February 1935 - Deceased: 07 January 2025
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பின்லாந்து, பிரான்ஸ் - Drancy ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகரத்தினம் மோட்சலட்சுமி அவர்கள் 07-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணக்கர் தில்லையம்பலம் - நாகம்மா தம்பதியினரின் பாசமிகு புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான குணலட்சுமி, சரோஜினிதேவி, லோஜனாதேவி மற்றும் சவுந்தராதேவி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சோதிராசா மற்றும் உருத்திரராசா (இலண்டன்), விமலராசா (இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சதீஸ் (நோர்வே), கமலினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேந்திரன் (ஈசன்- பிரான்ஸ்), மீருஜா (நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தீபிகா, சானிகா, சஸ்வின், வில்வின், கஸ்னி, செர்வின், றெஸ்வின், ஸ்ரீக்ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற கனகசுந்தரம் மற்றும் ராஜகோபால்(லண்டன்), விஸ்வரத்தினம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான மகாசீலன், தியாகராசா, புவனேஸ்வரி மற்றும் கமலாவதி (சின்னம்மா- இலண்டன்), புனிதவதி (கிளி- இலங்கை) ஆகியோரின் அண்ணியும்,
பிரேமளா (இலண்டன்), சியாமளா (இலண்டன்), வள்ளுவன் (பிரான்ஸ்), இளங்கோவன் (இலண்டன்), சாரளா (லலி- இலண்டன்), தேவசேனன் (இலண்டன்), லோகினி (இலண்டன்), குமுதினி (கும்மி- இலண்டன்), அரவிந்தன் (கண்ணா- இலண்டன்), அகிலன் (பிரான்ஸ்) ஆகியோரின் பெரியம்மாவும் மற்றும் சிறிய தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-01-2025 சனிக்கிழமை, 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை மணி வரையும், 15-01-2025 புதன்கிழமை காலை 9.00 - 11.45 மணி வரையும் Cimetière Intercommunal des Joncherolles (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse), France பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் Funérarium (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
