Mr. Kanagaratnam Paranirupasingam
(Retired Irrigation Department Officer)
Date of Birth: 13 February 1941 - Deceased: 23 February 2026
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகரெத்தினம் பரநிருபசிங்கம் அவர்கள் 23-02-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம் - சின்னத்தங்கம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - அன்னம்மா தம்பதியரின் மூத்த மருமகனும்,
சாரதாதேவியின் ஆருயிர் கணவரும்,
மகாலக்ஷ்மி (பிரான்ஸ்), காலஞ்சென்ற பொன்னம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரம் (கூட்டுறவுப் பரிசோதகர்), சரஸ்வதி (கனடா), திலகவதி (கொழும்பு), சிவலோகநாதன் (லண்டன்), சிவயோகவதி, சோமகலாவல்லி (பிரான்ஸ்), கேதீஸ்வரன் (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான நடராசா, நாகராசா ஆகி யோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சகுந்தலாதேவி, சோமசுந்தரம் மற்றும் திருவாவினன் குடியார், கமலாம்பிகை (லண்டன்), நித்தியானந்தன் (சித்தி விநாயகர் களஞ்சியம்- யாழ்ப்பாணம்), கனகசுந்தரம் (பிரான்ஸ்), வாசுகி (பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-02-2026 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கேரதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
