Mrs. Kanagaratnam Selvarani

Kanagaratnam Selvarani

Date of Birth: 27 February 1953 - Deceased: 16 January 2026

யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா – டொராண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. செல்வராணி கனகரத்தினம் அவர்கள் 16-01-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை - தர்மலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - சின்னம்மா  (சின்னத்தாய்) தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகரெத்தினம் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,

கனகேஸ்வரன் (பகீ), சத்தியமோகன் (மோகன்), செந்தில்குமரன் (ஈசன்), காலஞ்சென்ற சிவதர்சினி, சுதர்சினி, சதீஸ்குமார், கதாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுந்தரலிங்கம், பாலசிங்கம், ஆனந்தராணி, காலஞ்சென்ற கிருபாராணி, நரேந்திரன், காலஞ்சென்றவர்களான தனலட்சுமி,  கெங்காதரன், கணேசலிங்கம், மற்றும் திருவருட்செல்வி, புஷ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுகந்தி, சிவரூபி, துஷ்யந்தினி, முரளிதாஸ், சிவசங்கரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சஞ்சிகா, சியாமிகா, சஞ்சிதன், காவியன், இனிதன், இலக்கியன், செந்துசன், பார்கவி, கைலாஸ், பிரதியா, சிவபூரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான உலகநாதன், இலட்சுமி, தம்பிராசா, சண்முகம், தெய்வேந்திரன், பரமசாமி மற்றும் சரஸ்வதி, பரமேஸ்வரி, துளசி, ஈஸ்வரி, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கனகானந்தன், புஷ்பவதனா, கேதீஸ்வரன், ஆனந்தி, சாந்தினி, சிவநாதன், அன்டன் ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று மாலை 6:00 - 9:00 மணி வரையும் St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas St E Mississauga ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 20-01-2026 செவ்வாய்க்கிழமை மதியம் 1:00 - 3:00 மணி வரை இறுக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/01/2026 00:00)