திரு. கனகரத்தினம் செந்தில்ரூபன்

கனகரத்தினம் செந்தில்ரூபன்

தோற்றம்: 04 செப்டம்பர் 1977 - மறைவு: 16 மார்ச் 2024

யாழ். புங்குடுதீவு 2ம் பிறப்பிடமாகவும், நயினாதீவு 7ம் வட்டாரம், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகரத்தினம் செந்தில்ரூபன் அவர்கள் 16-03-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார்,  காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை - செல்லாச்சி மற்றும் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - சின்னம்மா தம்பதியினரின் அன்புப்ப பேரனும்,
 
காலஞ்சென்ற கனகரத்தினம் (PTK Rathnam) - சரஸ்வதி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பொன்னம்பலம் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
 
தனுசன், லிதுசன், சயன், கிஸ்மிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
ஜீவராணி, காலஞ்சென்ற ஜீவரஞ்சனி மற்றும் அம்பிகாதேவி, யசோரதி, தர்மரூபன், காலஞ்சென்ற ஜெகரூபி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
மகேந்திரநாதன், சிவநாதன், கௌரிகாந்தன், சிவராசா, காயத்திரி, வசந்ததாசன், சண்முகதாசன், கிருஸ்ணதாசன், வீரகேசன், சுகந்தினி, காலஞ்சென்ற சத்தியவதனி ஆகியோரின் மைத்துனரும்,
 
பவானி, கமலரஞ்சினி, தவமலர், டயானி, உமாகரன், ரவிச்சந்திரன் ஆகியோரின் சகலனும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 20-03-2024 புதன்கிழமை அன்று காலை 8.30 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 4.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்
 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/03/2024 04:00)