Mrs. Kanagarethinam Sandanaletchumi

Kanagarethinam Sandanaletchumi

Date of Birth: 03 February 1949 - Deceased: 30 July 2025

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கச்சேரியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகரெத்தினம் சந்தானலெட்சுமி  அவர்கள் 30-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பூரணலிங்கம் - கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு   மகளாரும், காலஞ்சென்றவர்களான நாராணபிள்ளை - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு  மருமகளும்,

காலஞ்சென்ற கனகரெத்தினம் (உரிமையாளர் - அன்னக்கிளி உணவகம் - கச்சேரியடி) அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஸ்ணதாசன் (கனடா), கிருஸ்ணவதி, கிருஸ்ணவேணி (இலண்டன்), காலஞ்சென்றவர்களான கிருஸ்ணகுமார், சுரேஸ்குமார் மற்றும் கிசோகுமார் ( பிரான்ஸ்) ஆகியோரின் பாசம்மிகு தாயாரும்,

சுதர்சினிதேவி, வசந்தரூபன் (கனடா), யசோதரன் (இலண்டன்), சஜித்திரா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரன், தனலெட்சுமி, வரதலெட்சுமி மற்றும் யோகரெத்தினம், காலஞ்சென்ற பரமேஸ்வரன்,  இராசலெட்சுமி, லலிதாம்பாள்  காலஞ்சென்றவர்களான நல்லையா, மனோன்மணி மற்றும் சரவணபவன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

ராசம்மா, பாலசுப்ரமணியம், தணிகாசலம், புவனேஸ்வரி, சுகந்தி காலஞ்சென்ற கதிரமலைநாதன், பரமானந்தன், காலஞ்சென்ற தர்மலிங்கம், தருமதேவி காலஞ்சென்றவர்களான கமலாச்சி, குணசிங்கம், வரதலெட்சுமி, பரராஜசிங்கம் மற்றும் நாகலெட்சுமி, சரசலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான கணவதிப்பிள்ளை, பரமேஸ்வரி, இராசரெத்தினம், நடராசா மற்றும் கோபாலன் ஆகியோரின் அன்புச் சகலியும்,

ரஜுவா (வேம்படி மகளிர் உயர்தரபாடசாலை), ஜதுஷா (யாழ் இந்துமகளிர் கல்லூரி),  வினோயன் (யாழ் பரியோவான் கல்லூரி), சுரேகா (யாழ் சுண்டிக்குழி மகளிர் கல்லூரி), பவித்திரா, ஹரிசாந், யரூசன், சகிரா ஆகியோரின் பாசம் மிகுந்த பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, உடலம் காலை 8:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

முகவரி:-

இல- 36/கச்சேரி நல்லூர்  வீதி,

கச்சேரி, யாழ்ப்பாணம்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/08/2025 04:00)