திரு. கனகசபை புவனேந்திரநாதன்
(இளைப்பாறிய உப, பதில் அதிபர்- யாழ் ஸ்கந்தவரோதயா கல்லூரி- சுன்னாகம்)
தோற்றம்: 15 செப்டம்பர் 1939 - மறைவு: 22 மார்ச் 2021
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை, கண்டி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனக புவனேந்திரநாதன் அவர்கள் 22-03-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை பாறுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சகுந்தலாதேவி அவர்களின் அன்பு கணவரும்,
கீதாஞ்சலி (கனடா), ஆதவன் (சத்திரசிகிச்சை நிபுணர்- கொழும்பு போதனாவைத்தியசாலை), சகுந்தலவாணி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இரவிச்சந்திரன் (கனடா), சிவசக்தி (கொழும்பு), கிரிதரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வெண்ணிலா (கனடா), பெளர்ணமி, செங்கதிர் (கொழும்பு), கீதன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்ற நாகேந்திரநாதன், சோதிநாதன், அற்புதமலர், ஞானமலர் (லண்டன்), மங்களேஸ்வரி, கோமளேஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அற்புதராணி, பொன்மலர் மற்றும் சிவலிங்கம், காலஞ்சென்ற வோட்டேர்ஸ், சுகேந்திரன், விமலாதேவி, சரவணபவானந்தன், ஜெயந்தினி, பாலகணேஷ் ஆகியோரின் அன்புச் மைத்துணரும் ஆவார்.
www.tamilthakaval.org
