திரு. கனகசபை சிவபாலசிங்கம் (துரை)

(ஓய்வுநிலை உத்தியோகத்தர் - யாழ். போதனா வைத்தியசாலை)

கனகசபை சிவபாலசிங்கம் (துரை)

மறைவு: 13 டிசம்பர் 2025

யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை சிவபாலசிங்கம் அவர்கள் 13-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை - அன்னம்மா தம்பதியினரின் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை - மாரிமுத்து தம்பதியினரின் மருமகனும்,

கோசலாதேவி (கோசலா) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெயக்காந் (பொறியியலாளர்), சந்திரகாந் (இலங்கை வங்கி உத்தியோகத்தர்), கௌசிகா (அபிவிருத்தி உத்தியோகத்தர்), ஷிவரங்கன் (ஆசிரியர்), கௌதமி (முகாமைத்துவ சேவை உதவியாளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்ஷிகா (மென் பொறியியலாளர்), சுகன்யா, ராஜ்குமார் (குடியேற்ற உத்தியோகத்தர்), நிதர்ஷா (ஆசிரியை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அநபாயன், சந்தியா, ஆதிரா, சாகித்தியா, ஆகிஷன், அபிஷனா, சாத்விகன் ஆகியோரின் அன்பு பேரனாரும்,

வரதராசா, நாகேந்திரன், காலஞ்சென்ற கந்தசாமி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

நாகேஸ்வரி, பாலசுப்பிரமணியம், தியாகலிங்கம், சரஸ்வதி, யோகாதேவி, பவானி, பஞ்சலிங்கம், சோதிலிங்கம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-12-2025 அன்று திங்கட்கிழமை இல- 40/2, கலைமகள் வீதி, அரியாலை என்னும் முகவரியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பிற்பகல் 02.00 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/12/2025 00:00)