Mr. Kanagasabai Sivalingham

Kanagasabai Sivalingham

Deceased: 02 August 2026

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவை வாழ்விடமாகவும், பிரித்தானியா - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கனகசபை சிவலிங்கம் அவர்கள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நெடுந்தீவு 13ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை - சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், நயினாதீவு 03ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் - சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

நாகாம்பிகை (வளர்மதி) அவர்களின் ஆருயிர் கணவரும் ஆவார்.

 அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-08-2026 சனிக்கிழமை அன்று முற்பகல் 11.00 - 1.00 மணி வரை  Divinity Funeral Care (209 Kenton Road, Kenton, Harrow HA3 OHD, United Kingdom) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 10-08-2026 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11.00 - 1.00 இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் Hendon Cemetery & Crematorium (Holders Hill Road, London NW7 1NB, United Kingdom) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/08/2026 00:00)