திரு. கனகசபை திருஞானம்

(ஓய்வு பெற்ற இ.போ.ச உயர் உத்தியோகஸ்தர்)

கனகசபை திருஞானம்

தோற்றம்: 31 ஆகஸ்ட் 1939 - மறைவு: 25 மே 2026

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கனடா, வவுனியா ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. கனகசபை திருஞானம் அவர்கள் 25-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி (சங்கீத ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

ரமேஷ் (சுவிஸ்), துஷித்தா (இலங்கை), கவிதா (கனடா), தினேஷ் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, திலகவதி, சபாரத்தினம், தில்லையம்பலம், மருதப்பு, திருச்செல்வம் மற்றும் பரமேஸ்வரி, ஜெகதாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

வடிவழகன், சத்குணநாதன், சர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரொபின், கிரிஷ்ணி, கீர்த்தனா திரிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-05-2026 புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் வவுனியாவில் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/05/2026 00:00)