Mr. Kanagasabai Thiruchelvam
(Retired Principal)
Date of Birth: 19 August 1942 - Deceased: 03 November 2024
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவை வசிப்பிடமாகவும், தற்போது சம்பியன் லேன், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை திருச்செல்வம் அவர்கள் 03-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை (சிற்பக் கலைஞர்)-தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம் (சிங்கத்தார்)-இரத்தினபூபதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
பொற்செல்வி (ஆசிரியை-நு/நல்லிளைப்பாற்றி ம.பாடசாலை), பொற்பாவை (பொது முகாமையாளர்-புங்குடுதீவு நயினாதீவு பலநோக்கு கூட்டுறவுசங்கம்), பொற்கொடி (ஆசிரியை), விஜிதா (ஆசிரியை), ஆராதனா (ஆசிரியை), காலஞ்சென்றவர்களான ரவிச்சந்திரன், பிரபாகர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலாநிதி A.V. இராஜேந்திரன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்-நுவரெலியா புனித சவேரியார் கல்லூரி), பாலசிங்கம் (வர்த்தகர்-புங்குடுதீவு), காலஞ்சென்ற சிமியோன் பாஸ்கர் (தாதி உத்தியோகத்தர்-நொதேர்ன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அர்ஜினா (கட்டட ஒப்பந்தகாரர்), நிரோஜா (அபிவிருத்தி உத்தியோகத்தர்-பிரதேச செயலகம் நல்லூர்), பாசுதா (இலண்டன்), அஷ்வினா (இலண்டன்), பிலிப்றோய் (Markrting), பவுஸ்தீனா (மனித உரிமை செயற்பாட்டாளர்), திஸ்ஷாளினி (ஆய்வுகூட உத்தியோகத்தர் நவலோக வைத்தியசாலை), லோஜன் (பல்கலைக்கழக மாணவன்), டிஸ்ஷாளினி (மாணவி) ஆகியோரின் அன்பு பேரனும்,
ஆகிசன், சகீசன், வெண்பா, கிருஷிகன், கருணி ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, திலகவதி, சபாரெத்தினம் (சிந்தனைச் சிற்பி), தில்லையம்பலம் (தபால் ஊழியர்), மருதப்பு (ஆசிரியர்), பரமேஸ்வரி, திருஞானம் (இலங்கை போக்குவரத்துச் சபை - பரிசோதகர்), ஜெகதாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், செல்லையா, இராசம்மா, நாகரத்தினம், அன்னலட்சுமி, மயில்வாகனம், இராஜேஸ்வரி, சிறிகரன் மற்றும் பசுபதிநேசன், காலஞ்சென்றவர்களான சோமாவதி (கனடா), நவரெத்தினம் மற்றும் சிவராசமதி (கொழும்பு), பத்மநாதன், தில்லைநாயகி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் புங்குடுதீவு மணற்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
56/7, சம்பியன் லேன்,
கொக்குவில் கிழக்கு, கொக்குவில்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
