Mr Kanagasabai Uthukulasinh

(ஓய்வுபெற்ற ஆசிரிய கலாசாலை உடற்கல்வி விரிவரையாளர்-நல்லூர்,கொழும்புத்துறை, பலாலி கோப்பாய் ஆசிரிய கலாசாலைகள்)

Kanagasabai Uthukulasinh

Date of Birth: 19 July 1933 - Deceased: 30 April 2024

யாழ். மண்டைதீவு 6ஆம் வட்டாரத்தை சேர்ந்த திரு கனகசபை யதுகுலசிங் அவர்கள் (ஓய்வுபெற்ற ஆசிரிய கலாசாலை உடற்கல்வி விரிவரையாளர் - நல்லூர், கொழும்புத்துறை, பலாலி, கோப்பாய் ஆசிரிய கலாசாலைகள்) 30-04-2024ம் திகதி செவ்வாய்கிழமை சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  கதிரிவேற்பிள்ளை கனகசபை - விசாலாசி தம்பதியரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான முருகேசு சதாசிவம் - கமலாம்பிபை தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
லலிதாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
 
பரந்தாமன் (மேலதிக அரச அதிபர் மன்னார்), அநிருத்தனன் (பணிப்பாளர் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
ரம்யா (முகாமையாளர் மக்கள் வங்கி- கன்னாதிட்டி), சியாமளா (ஆசிரியை,சைவ மங்கையர் வித்தியாலயம் - கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
அக்ஷயன் (பரியோவான கல்லூரி- யாழ்ப்பாணம்), கௌசல்யா (புனித பொஸ்கோ - யாழ்ப்பாணம்), பிரகதி, வர்ஷினி (சைவ மங்கையர்  வித்தியாலயம் - கொழும்பு), ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
ஞானாம்பிகை, நமசிவாயம், சதாசிவம், தனஞ்செயன், பஞ்சாட்சரம், சாரதாம்பிகை, அம்பிகாபதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-05-2024ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் இல- 186, பலாலி வீதி, கந்தர்மடத்தில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று புகழுடல் தகனக்கிரியைகளுக்காக மண்டைதீவு  இந்து மயானத்திற்கு மாலை எடுத்துச் செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/05/2024 05:13)