திரு. கனகசபை வரதராஜா

(ஓய்வுபெற்ற உப அதிபர்- புனித பெனடிக்ட கல்லூரி கொட்டாஞ்சேனை, முன்னாள் விரிவுரையாளர்- Oxonia Institute)

கனகசபை வரதராஜா

மறைவு: 22 மே 2024

யாழ்.மானிப்பாயைச் சேர்ந்தவரும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டவருமான திரு. கனகசபை வரதராஜா அவர்கள் 22-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் கனகசபை-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை-கமலம் தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற பாலேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,

நரேனின் பாசமிகு தந்தையும்,

உஷாவின் அன்பு மாமனாரும்,

லாவண்யா, சஞ்சனா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,

காலஞ்சென்றவர்களான திருமதி. ஆசைபிள்ளை, திருமதி. தர்மலிங்கம், திருமதி. செல்வராஜா, திரு. பத்மராஜா மற்றும் பேராசிரியர் தெய்வேந்திரராஜா, திருமதி. சுவாமிநாதன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 25-05-2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் அவரது இல-06, Moor Road, Colombo-06 இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/05/2024 04:00)