திரு. கனகசிங்கம் வைத்திலிங்கம் (சிவலிங்கம்)
(இளைப்பாறிய புகையிரத நிலைய உத்தியோகத்தர்)
தோற்றம்: 24 மார்ச் 1941 - மறைவு: 23 டிசம்பர் 2023
யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville யை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசிங்கம் வைத்திலிங்கம் அவர்கள் 23-12-2023 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்மா-வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து-கந்தவனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவமணி (இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
விஜிதா, சுஜாதா, விஜிதரன் (சுதன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பவளகாந்தராஜா, கலாமோகன், சுவேந்தினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான தவமணி, பூபாலசிங்ம், பரராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுஜீவன்-நித்தியா, வினோத்-ஜியா, Dr. சுரேகா, அச்சயா ஆகியோரின் அம்மப்பாவும்,
வினுஷ், சாரங்கி ஆகியோரின் அப்பப்பாவும்,
ஆருஷ், வியான் ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை, தூமணி, நிர்மலாதேவி, ஜெயதேவி மற்றும் திரவியம், சிவராசா, யோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்
காலஞ்சென்றவர்களான செல்வதீபம், கந்தசாமி மற்றும் சரஸ்வதி, முருகேசு ஆகியோரின் சகலனும் ஆவார்.
www.tamilthakaval.org
