Mr. Kanagendram Kumarasamy

(முன்னாள் வல்லை கூட்டுறவு வைத்தியசாலை மருந்தகப் பொறுப்பாளர்)

Kanagendram Kumarasamy

Date of Birth: 20 April 1934 - Deceased: 06 September 2025

மலேசியாவைப் பிறப்பிமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட திரு. கனகேந்திரம் குமாரசாமி அவர்கள் 06-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கண்மணி (யாழ். மாநகராட்சி முன்னாள் மருத்துவ உத்தியோகத்தர்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற விஜயரத்தினம், இரத்தினேஸ்வரி, காலஞ்சென்ற அன்னபூரணம், கெங்காதேவி, காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், இராசேந்திரம் மற்றும் குபேந்திரன், காலஞ்சென்ற சற்குணேஸ்வரன் ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, கந்தையா, ஆனந்தராசா, குமாரசாமி மற்றும் இராஜேஸ்வரி, காலஞ்சென்ற நடராஜா, மனோன்மணி, விமலாதேவி, காலஞ்சென்ற வள்ளியம்மை ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா, தர்மலிங்கம், மற்றும் கமலாம்பிகை, திரு, பேரம்பலம், காலஞ்ம்சென்ற திருமதி அற்புதமலர் மற்றும் திரு. திருமதி சர்வநந்தம் ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,

நிறைஞ்சனா (அதிபர் - கலைமன்றம், கனடா), காலஞ்சென்ற அமிர்தாஞ்சனா (இசை ஆசிரியை), லலிதாஞ்சனா (அதிபர் - அமிர்தாலாயா, கனடா), குகேந்திரன் (அதிபர் - கலைக்கோவில், கனடா), தினேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரபாலா, கதிர்காமன் (QC Manager - Contract Pharmaccutical's Ltd), வனிதா (Director - Kalaikovil Academy of FIne Arts), ஜனுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஐஸ்வர்யா கரிகரன், அபிநயா, சௌமியா,ஆகாஷ், அஸ்வினி ஆகியோரின் அம்மப்பாவும்,

அகரன், அபூர்வன், மதுரா, அர்ஜீன் ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 15-09-2025 திங்கட்கிழமை காலை 9:30 - 10:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். On behalf of Brampton Tamil Seniors Association "
- Christobelle Alphonsus (Canada, 13/09/2025 11:10)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/09/2025 04:00)