Mrs. Kanakamani Kanthasamy

(ஓய்வுபெற்ற உதவி அதிபர்-ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலை, இளைப்பாறிய ஆசிரியை-யாழ். கொக்குவில் ஞானபண்டித வித்தியாசாலை)

Kanakamani Kanthasamy

Date of Birth: 04 July 1933 - Deceased: 31 August 2024

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, கலட்டி, நல்லூர், Marhkam-கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி கனகமணி அவர்கள் 31-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர்-பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

கந்தையா-அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

கந்தசாமி (புதுமை லோலன் -இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

அன்பரசி (கனடா), அன்பழகன் (Building Inspector- City of Markham, கனடா), கலையரசி (கனடா), எழிலரசி (சுவிஸ்), காலஞ்சென்ற மதியழகன், Cllr. இளவழகன் (Mayor of Ipswich-பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ஶ்ரீசந்திரமோகன், சுகனி (கனடா), ஈஸ்வரன் (கனடா), ஜெயகுமார் (கனடா), மஞ்சுளா (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிவானந்தம், காலஞ்சென்றவர்களான சீவரட்ணம், சிவலிங்கம், சிவஞானம் ஆகியேரின் அன்பு சகோதரியும்,

சாந்தகுமாரி, காலஞ்சென்றவர்களான ஞானலக்சுமி, சரஸ்வதி, பவளக்கொடி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுகந்த்-நிலூசா, பிரசாந்த்-திவ்யா, லாவண்யா-கேசவா, லவன்-சௌமியா, கஜன், ஜெயன், சோபிகா-பிறண்டன், கீர்த்திகா, ஜசிக்கா, ஜோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஷ்ரய்யா, சேத், கைலாஷ், கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-09-2024 திங்கட்கிழமை மாலை 6.00-9.00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 04-09-2024 முற்பகல் 10.30-12.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் புகழுடல் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

முகவரி:-

584, Willam Foster Road, 

Markham, Ontario, L6B 0Z7, Canada.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/09/2024 04:00)