Mrs. Kanakamma Ramanathan
Date of Birth: 03 November 1939 - Deceased: 21 September 2024
யாழ். சிறுப்பிட்டி தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகம்மா இராமநாதன் 21.09.2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம்-மாசிலாமணி தம்பதியினரின் அன்பு மகளும்,
தர்மலிங்கம், காலஞ்சென்றவர்களான மகாதேவன், கமலாதேவி ஆகியோரின் பாசமுள்ள சகோதரியும்,
மங்கையர்க்கரசி, காலஞ்சென்ற கனகசபை ஆகியோரின் அன்பு மைத்துனியும்
தயாபரன், மீனலோஜினி, கௌசலா (சாந்தி), காலஞ்சென்ற கஜமுகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சக்திவேலன் ( பாபு ), நாளாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லதாங்கி, கம்சத்வனி, ஹரிபவன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
ஹரன்னியா, விதுரன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் அவரின் இல்லத்தில் 24-09-2024 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் காளையன் மெண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல் - குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
