Mrs. Kanakaranjitham Sevvanthinathan
Date of Birth: 30 January 1962 - Deceased: 14 July 2024
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகரஞ்சிதம் செவ்வந்திநாதன் அவர்கள் 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா-ரதிதேவி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அப்புதுரை-வாலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
வேலணையைச் சேர்ந்த செவ்வந்திநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
திலீபன், கயல்விழி, பிரதீப் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கர்ஷா, ஜெசிந்தன் ஆகியோரின் மாமியாரும்,
ரிஸ்ரின், ஸ்செப்பெல்லா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
யாதுஷன், அஞ்சனா, ஆரியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
பாக்கியலட்சுமி, புஸ்பராணி, பிரபாகரன், மகாலெட்சுமி, கிருபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கந்தசாமி, பரமலிங்கம், உதயா, காலஞ்சென்ற ரவீந்திரன், சசிரேகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி, சொர்ணலட்சுமி (குஞ்சு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சரணவனமுத்து, கனகசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு உடன்பிறவாத சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 18-07-2024 வியாழக்கிழமை அன்று மாலை 6.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை Lotus Funeral and Cremation Centre Inc (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 7.30 மணி முதல் 9.30 வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
