திருமதி. கனகேஸ்வரி சுவாமிநாதன்
தோற்றம்: 24 மார்ச் 1953 - மறைவு: 09 ஏப்ரல் 2026
யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், மருதடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகேஸ்வரி சுவாமிநாதன் அவர்கள் 09-04-2026 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசாமி - பொன்னம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - பார்வதி தம்பதியினரின் மருமகளும்,
Dr. சுவாமிநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
இளங்கோ (கணக்காளர்), Dr. நளாயினி, Dr. சிவசுப்பிரமணியம், பரமசிவம் (கணக்காளர்), காயத்திரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Dr. ஜெயந்தி, Dr. கணேசானந்தன், உதயதர்சினி, ஜனனி, கேதீஸ்வரன் (ஆசிரியா்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சமிக்ஷா, கவிஷா, கார்த்திகன், ஷ்வேதா, ஹரனி, பிரணவன், கெணிஸ், மிகிலேஷ், விதுஷா, ஆதிரையன், காங்கேயன் ஆகியோரின் பேத்தியும்,
விக்கினேஸ்வரன், மகேஸ்வரன், காலஞ்சென்ற அருந்தேஸ்வரி, சந்திரேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சின்னம்மா, சண்முகநாதன், கமலாம்பிகை மற்றும் சோதிநாதன், பாக்கியம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-04-2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் மருதடி வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
