திரு. கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம்
தோற்றம்: 21 மார்ச் 1941 - மறைவு: 14 மார்ச் 2025
யாழ். புலோலி (பல்லப்பை) பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 14-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - நாகமுத்து தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற கந்தசாமி - செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற இந்திராணி (பெரிய கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
பிருந்தா, வசந்தன், வேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரியின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
