திரு. கணபதிப்பிள்ளை பாலேந்திரன்

கணபதிப்பிள்ளை பாலேந்திரன்

தோற்றம்: 23 ஜூலை 1951 - மறைவு: 05 டிசம்பர் 2023

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பாலேந்திரன் அவர்கள் கடந்த 05.12.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான கோவிந்தசாமி ருக்மணி தம்பதியினரின் அருமை மருமகனும்,
 
பிரேமாவின் அன்புக் கணவரும்,
 
விதுஷாயினி, விதுஷன், ஜதீசன், துஷிந்தா, சுதாங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
சிறீதரன், கார்த்திகா, நித்தியானந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
ஷிகாஸ், ஆத்மிகா, அபினாஸ், அபிநயா ஆகியோரின் அன்பு பேரனும்,
 
இராஜேஸ்வரி காலஞ்சென்றவர்களான பத்மநாதன், மகேஸ்வரி மற்றும் பரதலிங்கம், காலஞ்சென்ற வரதராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
குணமணி, கோமதி, இராசதேவி,காலஞ்சென்ற மகேந்திரன் மற்றும் சிவமலர், சந்திராதேவி ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை (10.12.2023) முற்பகல் 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்
 
இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்  நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது .
 
விலாசம்:-
 
சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலி
யாழ்ப்பாணம்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/12/2023 08:36)