Mr. Kanapathipillai Kamalenthiran

Kanapathipillai Kamalenthiran

Date of Birth: 17 April 1948 - Deceased: 18 June 2025

 மட்டக்களப்பு - அமிர்தகழி ஓடக்கரையைப் பிறப்பிடமாகவும், மாமாங்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை கமலேந்திரன் அவர்கள் 18-06-2025 புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - கிருபையம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா - பூரணம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சதா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜசிகலா, விஜிகலா, ஜயக்கலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சரோஜினி, யோகேந்திரன், விசுவேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

திரேசம்மா, ஞானம்மா, ஜெயமாளினி ஆகியோரின் மைத்துனரும்,

தட்சணாமூர்த்தி, பிரபாகரன், காலஞ்சென்ற புவனேந்திரன் ஆகியோரின் மாமனாரும்,

சௌமி, கிஷாந்த், ரஜிஸ்காந்த், கெஷாணி, அபிசாய், பிரித்திக் ஆகியோரின் அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-06-2025 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாமாங்கம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/06/2025 04:00)