திரு. கணபதிப்பிள்ளை சங்கரப்பிள்ளை

(இளைப்பாறிய அதிபர்)

கணபதிப்பிள்ளை சங்கரப்பிள்ளை

தோற்றம்: 14 ஜூலை 1928 - மறைவு: 27 டிசம்பர் 2025

முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கரைச்சிக்குடியிருப்பு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை சங்கரப்பிள்ளை அவர்கள் 27-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், 

காலஞ்சென்றவர்களான கனகசபை - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

விஜயலட்சுமி (ஓய்வுநிலை ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தினி, லோஜினி, தர்மினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மநாதன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாச்சிப்பிள்ளை, முத்துப்பிள்ளை, சின்னத்தங்கம், பொன்னம்பலம், செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, வைரமுத்து, குட்டித்தம்பி, சரஸ்வதி, முத்தையா, பாலகிருஷ்ணன், தவமணி, நவமணி, மற்றும் பாக்கியலட்சுமி, கைலாயநாயகி, கணேசன், அருள்வரதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோபிகிருஷ்ணா, சியாமினி, அஷான், ஆரணி, அக்சயா, அர்விந், ஆரதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-01-2026 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 04-01-2026 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 - 1:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/01/2026 00:00)