திரு. கணபதிப்பிள்ளை சத்தியசீலன்

கணபதிப்பிள்ளை சத்தியசீலன்

மறைவு: 01 ஜனவரி 2025

முல்லைத்தீவு - தேவிபுரம் (ஆ) பகுதி புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை சத்தியசீலன் அவர்கள் 01-01-2025 புதன்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-01-2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது தேவிபுரம் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

குறிப்பு:-

அன்னாரின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்ளவுள்ள  நயினாதீவு உறவுகளுக்கான போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. காலை 7:00 மணியளவில் நயினாதீவில் இருந்து படகுச் சேவையும், பேரூந்து சேவையும் இடம்பெறும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/01/2025 05:00)