திரு. கணபதிப்பிள்ளை சிவநாதன்
(கைத்தொழில் பேட்டை உத்தியோகத்தர்)
தோற்றம்: 03 ஜனவரி 1948 - மறைவு: 31 ஜனவரி 2026
யாழ். அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவநாதன் அவர்கள் 31-01-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - சரஸ்வதி தம்பதியரின் மூத்த பாசமிகு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம் - முத்தம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
ஞானமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
விஜிதா (இலங்கை), கவிதா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சித்திரேஸ்வரன் (இலங்கை), கேதீஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கௌசல்யாதேவி (இலங்கை), சண்முகநாதன் (கனடா), செல்வக்காந்தன் (ஜேர்மனி), சுபத்திராதேவி (கனடா), சுசீலாதேவி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற ஞானசேகரம் பிள்ளை (இலங்கை) மற்றும் புனிதா (கனடா), காலஞ்சென்ற நளாயினி(ஜேர்மனி), சாம்பசிவம் (கனடா), காந்தராசா (கனடா), நவரத்தினம் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தட்ஷாயினி (சுவிஸ்), சஞ்சீவன், துர்ஷிகா (கனடா), துஷாந், பிரசாந், சுதர்சன் (கனடா),ஜனனி, நிராகுலன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுமுகன், புராதனி (கனடா), பவித்திரா, நிஷா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
மிஷாளன், சதுர்த்திகன் (இலங்கை), திஷான், திஸ்மியா, தார்மியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கலாவாணி அவர்களின் அன்பு உடன்பிறவா சகோதரனும்ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-02-2026 புதன்கிழமை காலை 8:00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைக்காக நிலாவரை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
