திரு. கணபதிப்பிள்ளை தவராசா (TTN தவம்)
(ஒளிப்பதிவுக் கலைஞர்)
தோற்றம்: 28 ஆகஸ்ட் 1959 - மறைவு: 30 டிசம்பர் 2024
யாழ். குப்பிளானை பிறப்பிடமாகவும், ஜேர்மனி - எசன் நகரையும், தற்போது லண்டனில் வசித்தவருமான திரு. கணபதிப்பிள்ளை தவராசா அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு புத்திரனும்,
விக்கினேஸ்வரி, கந்தசாமி, நந்தினி, யோகேஸ்வரி, தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,
கார்லன், அங்குஷன், அருட்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்
பார்வைக்காக:-
02-01-2025 வியாழக்கிழமை பிற்பகல் 3:00 - 5:00 மணி வரை
03-01-2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:00 - 5:00 மணி வரை
@
Angel Funeral Care (188, Alexandra ave, Harrow, HA2 9BN)
இறுதிக்கிரியை & தகனம்:-
05-01-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் Hendon Cemetery & Crematorium (Holders Hill Road, London, NW7 1NB இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
மதியபோசணம்:-
பிற்பகல் 3:30 மணியளவில் Grantview Banqueting Hall (10 Stonefield way Ruisilp HA4 0JS இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
