திருமதி. கணபதிப்பிள்ளை பத்மாவதி

கணபதிப்பிள்ளை பத்மாவதி

மறைவு: 07 ஏப்ரல் 2025

யாழ். காரைநகர் மணற்பிட்டியை பிறப்பிடமாகவும், கொட்டைபுலம் பயிரிக்கூடலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை பத்மாவதி அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற  A.S வேலுப்பிள்ளை -  செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - இராசம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

கணேசலிங்கம், புஸ்பராணி (இலங்கை), தவராணி  (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சியாமலா (இலங்கை), மகாதேவன் (இலங்கை), தேவராஜன் (பிரானஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அஜிவன், ஆதவன், அபினாஸ் ஆகியோரின் பேத்தியும்,

காலஞ்சென்ற பரந்தாமன், பராசக்தி, பரமேஸ்வரி, பவானி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-04-2025 செவ்வாய்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/04/2025 04:00)