திரு. கணபதிப்பிள்ளை இலட்சுமணன்

(ஓய்வுபெற்ற பொது முகாமையாளர் - மூதூர் பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்)

கணபதிப்பிள்ளை இலட்சுமணன்

தோற்றம்: 24 டிசம்பர் 1947 - மறைவு: 23 மே 2026

திருகோணமலை - நிலாவெளியைப் பிறப்பிடமாகவும், இல- 170/2, சுங்க வீதி, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.கணபதிப்பிள்ளை இலட்சுமணன் அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி - மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சீதையம்மா (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

சுபாகரன் (பிரதம பொறியியலாளர் - நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை), சுசிகரன் (பொறியியலாளர்), ஹைமாவதி (வைத்தியசாலை உரிமையாளர்), சுஜீத்தா (கணினிப் பொறியியலாளர் - அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

காயத்ரி, கலாநிதி சடகோபன் (அமெரிக்கா), உசவர்த்தினி (வைத்தியர்) ஆகியோரின் மாமனாரும்,

அபிராம், அத்விகா, லக்ஷிகா, அஷ்விகா, ஆரிஷ், ஆதன்யா, அர்மன் ஆகியோரின் பாசமிகு பாட்ட னாரும்,

காலஞ்சென்றவர்களான லிங்கரெட்ணம், பரமேஸ்வரி, யூகேஸ்வரி, புவனேஸ்வரி, சண்முகரெத்தினம் மற்றும் நவரெட்ணம் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-05-2026 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/05/2026 00:00)