திருமதி. கணபதிப்பிள்ளை முத்துமணி

கணபதிப்பிள்ளை முத்துமணி

மறைவு: 25 மே 2026

யாழ். கொடுக்கிலாய் உடுத்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை முத்துமணி அவர்கள் 25-05-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், இளையகுட்டி - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நவேந்திர ராணி, கௌசிகராசா ஆகியோரின் அன்பு தாயாரும்,

சேகர், க​னகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான துர்க்காதேவி, துசியா, மற்றும் சந்திரகுமார், துசாந்தினி, கஜீவன், கஜோதினி, சஸ்வினி, ஆகியோரின் அன்பு பேத்தியும்,

ஆருஸ், ஆதிஸ் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-05-2026 ​செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் உடுத்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/05/2026 00:00)