திருமதி. கணபதிப்பிள்ளை சரோஜினி லோகநாதன்
தோற்றம்: 06 ஆகஸ்ட் 1945 - மறைவு: 04 நவம்பர் 2025
திருமதி. கணபதிப்பிள்ளை சரோஜினி லோகநாதன் அவர்கள் 04-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், லட்சுமணன் லோநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரசாத், மதனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வெங்கடேஷ், சுகந்தினி ஆகியோரின் மாமியாரும்,
க்ருத்திக், யாத்வி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-11-2025 வியாழக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.30 மணியளவில், திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
