Mrs. Kanapathippillai Sowntharambigai

Kanapathippillai Sowntharambigai

Deceased: 06 January 2026

யாழ். காரைநகர் சடையாளியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை சௌவுந்தராம்பிகை அவர்கள் இன்று 06-01-2026 இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சண்முகநாதன், சாந்திநாயகன் (ஆசிரியர்), மகாலட்சுமி (சமுர்த்தி அலுவலகர், காரைநகர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தெய்வநாயகி (சாந்தி), கவிதா (கணக்காளர் - சுகாதார திணைக்களம், மன்னார்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-01-2026 வியாழக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/01/2026 00:00)