திரு. கணபதிப்பிள்ளை சுபாஷ்சந்திரன்

(ஓய்வுபெற்ற உதவிக் கல்வி பணிப்பாளர் கற்குடாக் கல்வி வலயம்)

கணபதிப்பிள்ளை சுபாஷ்சந்திரன்

தோற்றம்: 03 செப்டம்பர் 1963 - மறைவு: 20 ஜூலை 2026

மட்டக்களப்பு - நொச்சிமுனையைப் பிறப்பிடமாகவும், இல- 3/1, நாவக்குடா கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கணபதிப்பிள்ளை சுபாஷ்சந்திரன் அவர்கள் 27-07-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை - பாக்கியவதி தம்பதியினரின் மருமகனும்,

கமலினி (ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் அன்பு கணவரும்,

கிரிஷானி, கிரிதர்ஷா ஆகியோரின் தந்தையும்,

சுஜேகாந்த் (கட்டார்), ரகுநாதன் (Range Lanka) ஆகியோரின் மாமனாரும்,

அபர்ணிக்கா, சாத்விக், பிரனாளினி ஆகியோரின் அம்மப்பாவும்,

சுரேஷ்சந்திரன் (ஓய்வு பெற்ற உத்தியோகத்தர், மண்முனை வடக்கு பிரதேச செயலம்), சந்திரவதனி, (ஆசிரியை சக்தி வித்தியாலயம்), சுவர்ணசந்திரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர்), முகுந்தினி (இலண்டன்), சுகந்தினி ஆகியோரின் சகோதரரும்,

நீதாஞ்சலி (பனை அபிவிருத்தி அதிகார சபை), சங்கரலிங்கம் (முகாமையாளர், பாற்சபை, கித்துள்), பானுகி, சிவநாதன் (இலண்டன்), புவிதரன் (மர ஆலை, நாவற்குடா), தயாபரன் (அதிபர், சிவானந்தா தேசிய பாடசாலை), வசந்தினி (வைத்தியசாலை, வாகரை), பராபரன் (சவுதி அரேபியா), டிலாயினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-07-2026 செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கல்லடி உப்போடை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 158 9921

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/07/2026 00:00)