திருமதி கணபதிப்பிள்ளை தனலட்சுமி

கணபதிப்பிள்ளை தனலட்சுமி

தோற்றம்: 20 ஜூன் 1941 - மறைவு: 27 ஆகஸ்ட் 2020

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டஅவர்கள் 27-08-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா(இளைப்பாறிய ஆசிரியர்), தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற குணரத்தினம்(ஆயுள்வேத வைத்தியர்), பறுவதம் தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(இலங்கை குடிவரவு குடிஅகழ்வு உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுமதி(சுவிஸ்) அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற இரத்தினம், மனோன்மணி, சுப்பிரமணியம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மணிவண்ணன்(மணியம்- சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான முத்தையா, தங்கராசா, சிவபாதம்(வங்கி முகாமையாளர்), புஸ்பதேவி, சொக்கலிங்கம்(வர்த்தகர்), யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கமலநாயகி, மார்க்கண்டு, சிவகுமாரி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

சாந்தினி(சுவிஸ்), யசோதினி, மாலதி(ஆசிரியை) ஆகியோரின் அன்பு அத்தையும்,

சுகன்யா(கனடா), அனுசியா(ஆசிரியை), அகல்யா(சுவிஸ்), சுயித்கண்ணா(கனடா), சிந்துளா(கனடா) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

ராஐன், கெளரி, கலா, லிங்கா ஆகியோரின் அன்பு மாமியும்,

சுஜிதா, ராஜிதா, டினேசன், ஷரவண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லெய்றா  அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-

Saturday, 29 Aug 2020 8:30 AM – 11:30 AM
Sunday, 30 Aug 2020 8:30 AM – 11:30 AM
Krematorium NordheimKäferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
 
தகனம்:-
 
Monday, 31 Aug 2020 9:00 AM – 11:00 AM
Krematorium NordheimKäferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
Halle 1
 
தொடர்புகளுக்கு:-

பாஸ்கரன் – பெறாமகன்
Mobile : +41 78 973 0504  
ரஞ்சன் – பெறாமகன்
Mobile : +41 78 732 7724  
டினேசன் – பேரன்
Mobile : +41 79 711 5962  
ஷரவண் – பேரன்
Mobile : +41 78 613 0678  
சுமதி – மகள்
Mobile : +41 44 241 1519  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2020 08:43)