Mr. Kanapathypillai Pathmanathan

(முன்னாள் தொழிலதிபர்)

Kanapathypillai Pathmanathan

Date of Birth: 01 September 1940 - Deceased: 28 August 2024

யாழ். கொக்குவில் மேற்கு, கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை பத்மநாதன் அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை-சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற மார்கண்டு-தங்கப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற ஞானசக்தி அவர்களின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்ற றஜீவன், லவக்குமரன் (இலண்டன்), தனஞ்ஜெயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரசாந்தி (இலண்டன்), விஜயதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யாதவன், டிக்‌ஷிதா (இலண்டன்), அனன்யா ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்றவர்களான தவயோக சிந்தாமணி, பஞ்சலிங்கம், சுந்தரலிங்கம், இராசலிங்கம் மற்றும் சொர்ணலிங்கம் (இலண்டன்), விக்கினேஸ்வரி, சண்முகலிங்கம் (ஜேர்மனி) ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கிருஸ்ணாநந்தா, முருகேசுப்பிள்ளை, ஞானேஸ்வரதேவி மற்றும் Dr. தியாகராஜா (இலண்டன்), மீனாம்பிகை (ஜேர்மனி), விஜயா (இலண்டன்), இந்திரலேகா (ஜேர்மனி), பராசக்தி, அருளானந்தம், நகுலேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-09-2024 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

முகவரி:-

C.C.T.M.S பாடசாலை ஒழுங்கை,

கொக்குவில் மேற்கு, கொக்குவில்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/09/2024 04:00)