Mr. Kandiah Chandrarajah

Kandiah Chandrarajah

Date of Birth: 03 June 1953 - Deceased: 27 March 2025

யாழ்.  நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. கந்தையா சந்திரராசா அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், கந்தையா - தண்டிகைப்பிள்ளை தம்பதியினரின் மூன்றாவது மகனும்,

இராசையா, காலஞ்சென்ற முருகையா, தவதியம்மா ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-03-2025 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது சகோதரனின் (இராசையா) இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் புகழுடல் சீயாக்காடு மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா  சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/03/2025 04:00)