Mr. Kandiah Govindapillai
(Retired Technical Officer)
Deceased: 06 June 2025
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல-62, இராமநாதபுரம் வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கோவிந்தப்பிள்ளை அவர்கள் 06-06-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா (குருவிச் சட்டம்பியர்) - முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பராணி (ஓய்வுபெற்ற ஆசிரியயை), தனிநாயகம் (ஓய்வுபெற்ற எழுதுநர்), சோதிமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சோமசுந்தரம் (ஓய்வுபெற்ற எழுதுநர் SA), சேதுபதி (முரசுமோட்டை, நவரத்தினம் (கனடா), முத்துக்குமாரு (இராமநாதபுரம்), காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வசந்தி (ஓய்வுபெற்ற பிரதம முகாமைத்துவ உதவியாளர்), குமுதினி (ஆசிரியை - வட்டக்கச்சி மத்திய கல்லூரி), பகீரதன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர் - நீர்ப்பாசணப் பொறியியலாளர் அலுவலகர், கிளிநொச்சி மேற்கு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அன்ரன் திருச்செல்வம் (அன்ரன்), விஜயரட்ணம் (விஜயன்), நிர்மலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யதுசன் (மாணவன் - இராமநாதபுரம் மகா வித்தியாலயம்), மிதுசா, திஷானி, அக்ஷரா (மாணவிகள் - கிளிநொச்சி மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் இராமநாதபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
