திரு. கந்தையா குமாரசிங்கம்
(இளைப்பாறிய சுங்கத்திணைக்கள உத்தியோகத்தர்)
மறைவு: 06 ஆகஸ்ட் 2024
இல-39, சென் லோறன்ஸ் வீதி, வௌ்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட திரு.கந்தையா குமாரசிங்கம் அவர்கள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா-சின்னம்மா தம்பதியினரின் இளைய புதல்வரும்,
காலஞ்சென்ற தவநாயகி அவர்களின் அன்புக்கணவரும்,
பாலகுமாரன், சிவகுமரன், மஞ்சுளா, யசோதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தி, சியாமளா, மகேந்திரன் ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், இராசமணி, தம்பிராஜா, சிவபாக்கியம், யோகாம்பாள் ஆகியோரின் சகோதரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் இல-39, சென் லோறன்ஸ் வீதி, வௌ்ளவத்தையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் 10-08-2024 சனிக்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் கிருலப்பனை பூர்வாராம மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
