Mrs. Kandiah Navarathinamma

(Retired Maths Teacher)

Kandiah Navarathinamma

Date of Birth: 28 October 1929 - Deceased: 21 March 2025

யாழ். நவிண்டில் கரணவாய் வடக்கு கரவெட்டியை பிறப்பிடமாகவும், கதிரிப்பாய் அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா நவரத்தினம்மா அவர்கள் 21-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் - வள்ளியம்மை தம்பதியினரின் பாசமிகு கனிஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா - மீனாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா (SPHI) அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தா, வனஜா  ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரவிசங்கர், திருக்குமார் ஆகியோரின் மாமியாரும்,

துவாரகா, ஆஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-03-2025 புதன்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று  புகழுடல் கதிரிப்பாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/03/2025 04:00)