திரு. கந்தையா சிவராசா
(ஓய்வுபெற்ற சீமெந்து கூட்டுத்தாபன ஊழியர்)
தோற்றம்: 26 பெப்ரவரி 1956 - மறைவு: 02 டிசம்பர் 2024
யாழ். கைதடி நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சிவராசா அவர்கள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற குமாரசாமி-கனகபூசணி தம்பதயினரின் மருமகனும்,
காலஞ்சென்ற குணபூசணி அவர்களின் அன்புக் கணவரும்,
கவிச்சாலினி (இலண்டன்), காலஞ்சென்ற ராகுலன், பிருந்தாயினி (Russion Steet Hotel) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவரூபன் (இலண்டன்), திலக்ஷன் (Commercial Bank Metchant Acquiring Unit) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுஜி, டெனிஷா, அபிதேவ், தேஸ்னா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சிவஞானம் (Uthaya Lodge - வௌ்ளவத்தை), இராசமணி, செல்வராணி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-12-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் குற்றுப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
