Mr. Kandaiha Sothilingham
Date of Birth: 16 July 1947 - Deceased: 31 May 2025
யாழ். உரும்பிராய் கிழக்கு ஞான வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சோதிலிங்கம் அவர்கள் 31-05-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கனகரத்தினம் - அன்னபூரணம் (கனடா) தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
கௌரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பகீரதன், பாலமுரளி, நளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், சோதிமணி, செல்வமணி (இலண்டன்), சிதம்பரநாதன் (சொக்கர் - கனடா), காலஞ்சென்ற புஷ்பமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-06-2025 திங்கட்கிழமை மாலை 5.00 - 9.00 மணி வரையும், 03-06-2025 செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணி முதல் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, Ontario) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium Inc. (2 Stalwart Industrial Drive Gormley, ON L0H 1G0) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
