திரு. கந்தையா தாமோதரம்பிள்ளை (சின்னக் கிளி)

கந்தையா தாமோதரம்பிள்ளை (சின்னக் கிளி)

தோற்றம்: 21 பெப்ரவரி 1959 - மறைவு: 28 மார்ச் 2025

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், Markham - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா தாமோதரம்பிள்ளை அவர்கள் 28-03-2025  வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுபத்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

கேதுசன், அஷ்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற வள்ளியம்மாள் (சிவலோகம்), சிறிஸ்கந்தராசா (துரை), இராசலட்சுமி (தங்கா), பரமேஸ்வரன் (இராசதுரை), காலஞ்சென்ற கதிர்காமநாதன் (தங்கக் கிளி), சிற்றம்பலம் (பொன்னுக்கிளி), மல்லிகாதேவி, காலஞ்சென்ற லோகநாதன் (இந்திரன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-04-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/04/2025 04:00)